/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிலாளி மயங்கி விழுந்து பலி
/
தொழிலாளி மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 01, 2026 04:43 AM
திருப்போரூர்:தொழிற்சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலைக்கு மணலியில் உள்ள தனியார் காஸ் நிறுவனத்தில் இருந்து லோடு வாகனத்தில் சிலிண்டர்கள் வந்தன.
லோடு வாகனத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதிய நாப்பாளையத்தை சேர்ந்த சரவணன், 50 என்பவர் வந்தார்.
ஆலத்துார் தொழிற் சாலைக்கு வந்த பின் சிலிண்டரை இறக்கி வைத்தார். தொடர்ந்து காலி சிலிண்டரை ஏற்றும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென சரவணன் மயங்கி விழுந்தார்.
சக தொழிலாளர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

