sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

lகருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லை வழியே...மாற்று சாலை: l28 கி.மீ., துாரம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு

/

lகருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லை வழியே...மாற்று சாலை: l28 கி.மீ., துாரம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு

lகருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லை வழியே...மாற்று சாலை: l28 கி.மீ., துாரம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு

lகருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லை வழியே...மாற்று சாலை: l28 கி.மீ., துாரம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு


ADDED : ஜூன் 20, 2025 02:51 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மதுராந்தகம் அருகே கருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் இடையே, 28 கி.மீ.,

துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை துவங்க உள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், பரனுார் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை தொடர்கிறது.

சென்னை அடையாறு, திருவான்மியூர், துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழைந்து, ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து செங்கல்பட்டை கடப்பதற்கு படாதபாடுபடுகின்றன. தென்மாவட்டங்களில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும், நெரிசலில் சிக்கி திணறுகின்றன.

இதனால் எரிபொருள் விரயம், பயண நேரம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

ஆனால், திட்டம் செயலாக்கத்திற்கு வரவில்லை. இந்நிலையில், 'கருங்குழியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரத்திற்கு, 28 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்' என, கடந்த மார்ச் மாதம் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.

தற்போது, இதற்கான முன்னேற்பாடுகளை, நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, கட்டண சாலையாக, கருங்குழி - மாமல்லபுரம் பூஞ்சேரி சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த சாலை திருக்கழுக்குன்றத்திற்கு வெளியே அமையும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. தற்போது திருக்கழுக்குன்றத்திற்குள் செல்லும் வகையில் சாலை அமைக்க, சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளன.

இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. தனியார் நிறுவனங்கள் வாயிலாக, இதற்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு, வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சாத்தியக்கூறுகள் இருந்தால், இத்திட்டத்தை செயல்படுத்த விரைந்து நிதி வழங்குவதற்கு, நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த சாலை, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை - ஜி.எஸ்.டி., சாலையின் இணைப்பு சாலையாக அமையும்.

ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் குறைவதற்கும் வழிவகுக்கும். பல இடங்களில், ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையாக இந்த சாலையை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us