/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.105 கோடி கடன் வழங்கல்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.105 கோடி கடன் வழங்கல்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.105 கோடி கடன் வழங்கல்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.105 கோடி கடன் வழங்கல்
ADDED : ஜூன் 12, 2025 02:34 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 923 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேற்று, 105 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில், மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, மணிமேகலை விருதுகளை நேற்று வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், 923 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, 106 கோடி ரூபாய் கடன் உதவியை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, சப்- கலெக்டர் மாலதி ெஹலன், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 76 குழுக்களுக்கு 9.15 கோடி ரூபாயும், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 71 குழுக்களுக்கு 9.49 கோடி ரூபாயும், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 குழுக்களுக்கு 9 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 66 குழுக்களுக்கு 7.3 கோடி ரூபாயும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 89 குழுக்களுக்கு 10.24 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 90 குழுக்களுக்கு 10.46 கோடி ரூபாயும், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 83 குழுக்களுக்கு 8.42 கோடி ரூபாயும், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 55 குழுக்களுக்கு 7.36 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறம்:
செங்கல்பட்டில் 11 குழுக்களுக்கு 1.40 கோடி ரூபாயும், மதுராந்தகத்தில் 15 குழுக்களுக்கு 1.12 கோடி ரூபாயும், மறைமலை நகரில் 16 குழுக்களுக்கு 1.75 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் 9 குழுக்களுக்கு 1.6 கோடி ரூபாயும், அச்சிறுபாக்கத்தில் 5 குழுக்களுக்கு 55 லட்சம் ரூபாயும், கருங்குழியில் 3 குழுக்களுக்கு 50 லட்சம் ரூபாயும், இடைக்கழிநாடு பகுதியில் 17 குழுக்களுக்கு 2.7 கோடி ரூபாயும், மாமல்லபுரத்தில் 3 குழுக்களுக்கு 44 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில் 36 குழுக்களுக்கு 5.17 கோடி ரூபாய், அனகாபுத்துாரில் 34 குழுக்களுக்கு 5.9 கோடி ரூபாய், சிட்லபாக்கத்தில் 3 குழுக்களுக்கு 44 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
செம்பாக்கத்தில் 8 குழுக்களுக்கு 89 லட்சம் ரூபாயும், திருநீர்மலையில் 4 குழுக்களுக்கு 43 லட்சம் ரூபாயும், பல்லாவரத்தில் 60 குழுக்களுக்கு 7.68 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
பீர்கன்காரணையில் 5 குழுக்களுக்கு 51 லட்சம் ரூபாய், பெருங்களத்துாரில் 11 குழுக்களுக்கு 1.16 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக, 923 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 105 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.