/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 07:53 PM
திருப்போரூர்:பூண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் அருகே, பூண்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி ராயமங்கலம், முள்ளிப்பாக்கம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, விவசாயிகள் அதிக அளவில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.
தங்களது கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற மானாமதி, கரும்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலையும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, சுற்றுப்புற பகுதி விவசாயிகளின் நலன் கருதி, பூண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.