/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கத்தில் நாடக மேடை அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
/
சோத்துப்பாக்கத்தில் நாடக மேடை அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
சோத்துப்பாக்கத்தில் நாடக மேடை அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
சோத்துப்பாக்கத்தில் நாடக மேடை அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 30, 2025 06:28 PM
மேல்மருவத்துார்:சோத்துப்பாக்கம் ஊராட்சியில், நாடக மேடை அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டு, சோத்துப்பாக்கம் ஊராட்சி உள்ளது.
அப்பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அஞ்சுரம்மன் கோவில், முருகன் கோவில்கள் உள்ளன.
இங்கு நாடக மேடை இல்லாததால், விழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து நடத்த முடியாமல், அப்பகுதி மக்கள், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெயில், மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
நாடக மேடை அமைக்க இப்பகுதி மக்கள், ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முருகன் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் நாடக மேடை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சோத்துப்பாக்கத்தில் நாடக மேடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.