/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்த பகுதிவாசிகள் கோரிக்கை
/
சாலையோரம் ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்த பகுதிவாசிகள் கோரிக்கை
சாலையோரம் ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்த பகுதிவாசிகள் கோரிக்கை
சாலையோரம் ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்த பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 11:46 PM

வண்டலுார்,வண்டலுார் ஊராட்சி குளத்திலிருந்து அகற்றப்பட்டு, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள ஆகாய தாமரை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலுார் ஊராட்சி, தாங்கல் ஏரிக்கு எதிரே, சித்தி விநாயகர் கோவில் அருகே, 2022ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் வாயிலாக, 23 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில், 50 சென்ட் இடத்தில் புதிய குளம் உருவாக்கப்பட்டது.
மழைநீர் தேக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்த குளம், உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அருகிலுள்ள வீடுகளின் கழிவுநீர், இந்த குளத்தில் விடப்படுகிறது. ஆகாயத் தாமரை படர்ந்து, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்தது.
இதுகுறித்து, கடந்த பிப்ரவரியில், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குளத்தில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரையை அகற்றி துார் வார வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், வண்டலுார் பகுதி அ.தி.மு.க.,வினர் ஒன்றிணைந்து, ஊராட்சி நிர்வாகம் அனுமதியுடன், கடந்த வாரம் குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை அகற்றினர்.
அகற்றப்பட்ட ஆகாய தாமரை கழிவுகள், 10 டன் அளவில், சாலையோரம் குவிக்கப்பட்டது. தற்போது, இந்த கழிவுகள் காய்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளன.
இன்னும் சில நாட்களில் இந்த கழிவுகள் நன்றாக காய்ந்து, காற்றில் பறந்து சாலையை ஆக்கிரமிக்கும். இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவர். போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் என்பதால், சாலையோரம் மலை போல் குவிக்கப்பட்டுள்ள ஆகாய தாமரை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.