/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு சிங்கபெருமாள்கோவிலில் தவிப்பு
/
ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு சிங்கபெருமாள்கோவிலில் தவிப்பு
ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு சிங்கபெருமாள்கோவிலில் தவிப்பு
ரயில் நிலைய கழிப்பறைக்கு பூட்டு சிங்கபெருமாள்கோவிலில் தவிப்பு
ADDED : பிப் 17, 2025 03:18 AM

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தை பயன்படுத்தி திருக்கச்சூர், கொண்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் என, பல ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இங்கு பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை, பல மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பரபரப்பாக மக்கள் வந்து செல்வர். மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்த பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்வோர் அதிகமாக இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
விஷேச நாட்களில் இந்த ஊரில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிகமானோர் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில், ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறை பூட்டப்பட்டு உள்ளது.
மேலும், கழிப்பறை பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளதால், தனியே செல்வோர் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.
எனவே, பூட்டியுள்ள கழிப்பறையை பயணியரின் பயன்பாட்டுக்கு கொண்டுவர, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.