/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' செய்யூரில் வரும் 16ல் முகாம்
/
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' செய்யூரில் வரும் 16ல் முகாம்
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' செய்யூரில் வரும் 16ல் முகாம்
'உங்களை தேடி; உங்கள் ஊரில்' செய்யூரில் வரும் 16ல் முகாம்
ADDED : அக் 11, 2024 12:05 AM
செங்கல்பட்டு:செய்யூரில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' சிறப்பு முகாம், வரும் 16ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை செயலாக்கும் நோக்கில், வரும் 16ம் தேதி, புதன்கிழமை காலை, கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களால், செய்யூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலைங்கள், ரேஷன் கடைகள், பள்ளி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கலெக்டர் நேரில் சந்தித்து, பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.