/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிவபெருமான் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி
/
சிவபெருமான் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி
சிவபெருமான் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி
சிவபெருமான் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி
ADDED : பிப் 17, 2024 01:52 AM

திருப்போரூர்:கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் - வேலுமணி தம்பதிக்கு, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்நிலையில், சங்கர் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரி, கோவில் போன்ற இடங்களில் ஓவியம் வரைந்து, அதன் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தார். ஓராண்டுக்கு முன் உடல்நலக் குறைவால், சங்கர் உட்பட அவர் மனைவியும் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகினர்.
இந்த தம்பதி கோவில் விழா நடக்கும் இடங்களுக்கு சென்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பல்வேறு ஓவியம் வரைந்து, விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கும் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்போரூரில் நடைபெறும் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கு வந்தனர். கோவில் தெற்கு மாடவீதியில், கங்கா தேவியுடன் கூடிய சிவபெருமானின் ஓவியத்தை அற்புதமாக தரையில் வரைந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதை, அவ்வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.