/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் விதிமீறல்களில் ஈடுபடும் லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அலட்சியம்
/
சித்தாமூரில் விதிமீறல்களில் ஈடுபடும் லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அலட்சியம்
சித்தாமூரில் விதிமீறல்களில் ஈடுபடும் லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அலட்சியம்
சித்தாமூரில் விதிமீறல்களில் ஈடுபடும் லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அலட்சியம்
ADDED : செப் 12, 2025 02:19 AM

சித்தாமூர்:சித்தாமூரில், விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரி லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து, லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்யூர் அருகே, சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான நல்லாமூர், விளாங்காடு, சரவம்பாக்கம், கொளத்துார், தொன்னாடு உள்ளிட்ட பகுதிகளில், பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
பா திப் பு இந்த கல்குவாரிகளில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லி, எம்--சாண்ட், பி-சாண்ட், கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
குவாரிகளில் இருந்து செல்லும் லாரிகள், அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்வது, பாரம் ஏற்றிச் செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வது,
அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இவற்றில், பெரும்பாலான டிப்பர் லாரிகள், வாகன பதிவெண் பலகை இல்லாமல் வலம் வருகின்றன.
லாரிகள் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றிச் செல்வதால், சித்தாமூர் பகுதியில் செய்யூர் - போளூர் சாலையின் நடுவே தடங்கள் பதிந்து, சாலை மேடு பள்ளமாக மாறி வருகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
அபராதம் காவல்துறையினரும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு, பெயரளவில் அபராதம் விதித்து வருகின்றனர்.
லாரி உரிமையாளர்களும் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, மீண்டும் விதிமீறலில் ஈடுபடுவது வழக்கமாக தொடர்கிறது.
எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சித்தாமூர் பகுதியில் கண்காணித்து, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரி லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.