ADDED : டிச 04, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், உரிய அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு சுங்கத்துறை உதவி புவியியலாளராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணி. நேற்று காலை, திருநீர்மலை சாலை, கடப்பேரி வழியாக, மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினார்.
அதில், லாரியில் 4 யூனிட் மணல் இருந்தது. ஆனால், அதற்கான உரிய அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லை. லாரியை அதிகாரி சோதனையிடும் போது, ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.