ADDED : ஜன 31, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் காந்தி சிலை அருகே, லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 22. இவர், மதுராந்தகம் காந்தி சிலை அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 20 லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து, அப்பகுதிக்கு சென்ற மதுராந்தகம் போலீசார், வினோத்திடமிருந்து, தடை செய்யப்பட்ட 20 லாட்டரி சீட்டுகள் மற்றும் 25,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.