ADDED : நவ 28, 2025 04:00 AM
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் அருகே தனியார் கல்லுாரி மாணவி, காதல் தோல்வியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், வடலுார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாம் ஆண்டு படித்தார்.
இவர், அதே கல்லுாரியில் படிக்கும் மாணவர் ஒருவரை, ஒருதலையாக காதலித்து, சில நாட்களுக்கு முன் அந்த மாணவரிடம், தன் காதலை கூறியுள்ளார்.
அந்த மாணவர், வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த இளம்பெண், நேற்று காலை 10:00 மணியளவில், கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில், துப்பட்டாவால் மின்விசிறியில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த கிளாம்பாக்கம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

