/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : டிச 08, 2024 01:40 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த சத்தியமங்கலம் பகுதியில் மதுராந்தகம்-கூவத்துார் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்து என தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சத்தியமங்கலம் வயல்வெளிப்பகுதியில் சாலை ஓரத்தில் குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்ந்து செல்வதால்,
சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் விபத்து ஏற்படுவதற்கு முன் தாழந்து செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.