/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின்னழுத்தம் பூயிலுப்பையில் மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்தம் பூயிலுப்பையில் மக்கள் அவதி
ADDED : ஆக 01, 2025 09:35 PM
திருப்போரூர்:வீடுகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால், பூயிலுப்பை கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, சில நாட்களாக குறைந்த மின் அழுத்த பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், வீடுகளில் உள்ள குளிர்சாதனபெட்டி, மின்விசிறி, வாஷிங்மிஷின் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்காமல் பழுதடைந்து விடுகின்றன.
பகலில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள், இரவில் துாங்க முடியாமல் அவதிப் படுகின்றனர். மாணவ - மாணவியர் படிக்க முடியாமல் மன உளைச்சல் அடைகின்றனர்.
எனவே, குறைந்த மின் அழுத்த பிரச்னையை சரிசெய்ய, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.