/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கன்டெய்னர் லாரியில் மோதிய சொகுசு பஸ்
/
கன்டெய்னர் லாரியில் மோதிய சொகுசு பஸ்
ADDED : செப் 19, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த தயானந்த பாபு, 50, என்பவர், சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி, கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார்.
அதேபோல, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, சீனிவாசன், 35, என்பவர் தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
நேற்று காலை 6:00 மணியளவில், மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரத்தில், துாக்க கலக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, மறு மார்க்கத்தில் சாலையைக் கடந்து, சொகுசு பேருந்து மீது மோதி உள்ளது.
இதில், கனடெய்னர் லாரி ஓட்டுநரும், சொகுசு பேருந்து ஓட்டுநரும் லேசான காயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, பயணியர் காயமின்றி தப்பினர்.