/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
/
வேளாண் துறை சார்பில் இயந்திரங்கள் பயிற்சி
ADDED : மே 26, 2025 11:54 PM
மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விழிப்புணர்வு பயிற்சி நடைபெற உள்ளது.
'அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் இயக்குதலும் பராமரித்தலும்' என்ற தலைப்பில், இரண்டு நாட்கள் இந்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெறும்.
நாளை, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கும், நாளை மறுநாள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில், ஆர்வமுள்ள மதிப்புக்கூட்டு இயந்திரம் வைத்திருப்போர், மதிப்புக்கூட்டு இயந்திரம் வாங்க ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்புக்கு 98405 54525 பிரின்ஸ் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர், நந்தனம் மற்றும் தமிழ்ச்செல்வன் 94440 73322
உதவி செயற்பொறியாளர், காஞ்சிபுரம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.