/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலைய நுழைவு பகுதி பள்ளத்தால் ஆபத்து
/
மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலைய நுழைவு பகுதி பள்ளத்தால் ஆபத்து
மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலைய நுழைவு பகுதி பள்ளத்தால் ஆபத்து
மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலைய நுழைவு பகுதி பள்ளத்தால் ஆபத்து
ADDED : செப் 28, 2024 11:57 PM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்ட பயணியர், இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மார்க்கம் மற்றும் திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்நுழையும் பகுதியில், இரண்டு இடங்களில் மிகப்பெரிய ஆபத்தான பள்ளங்கள் உருவாகியுள்ளன.
தற்போது மழை பெய்து வருவதால், பள்ளங்களில் மழை நீர் தேங்கி, பள்ளம் இருப்பது தெரியாதவாறு உள்ளது. இதனால், பேருந்து ஓட்டுனர்கள், பெரும் சிரமம் அடைகின்றனர்.
எனவே, பேருந்து நுழைவாயில் பகுதியில், 2 அடி ஆழத்திற்கு மேல், ஆபத்தான வகையில் பள்ளம் இருப்பதால், அவற்றை மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.