/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம்- -- வெண்ணாங்குப்பட்டு சாலையில் பள்ளங்களால் அபாயம்
/
மதுராந்தகம்- -- வெண்ணாங்குப்பட்டு சாலையில் பள்ளங்களால் அபாயம்
மதுராந்தகம்- -- வெண்ணாங்குப்பட்டு சாலையில் பள்ளங்களால் அபாயம்
மதுராந்தகம்- -- வெண்ணாங்குப்பட்டு சாலையில் பள்ளங்களால் அபாயம்
ADDED : ஜன 26, 2025 01:28 AM

சித்தாமூர்:சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 37 கி.மீ., நீள நெடுஞ்சாலை உள்ளது.
சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.
தினசரி சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில் சாலை நடுவே பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக முதுகரை, நேத்தப்பாக்கம், குருகுலம், வில்வராயநல்லுார் போன்ற பகுதிகளில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.