/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் -- ஆலிக்குப்பம் பஸ் அடிக்கடி பழுதால் பயணியர் அவதி
/
மதுராந்தகம் -- ஆலிக்குப்பம் பஸ் அடிக்கடி பழுதால் பயணியர் அவதி
மதுராந்தகம் -- ஆலிக்குப்பம் பஸ் அடிக்கடி பழுதால் பயணியர் அவதி
மதுராந்தகம் -- ஆலிக்குப்பம் பஸ் அடிக்கடி பழுதால் பயணியர் அவதி
ADDED : டிச 23, 2024 01:46 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகத்திலிருந்து அருங்குணம் வழியாக ஆலிக்குப்பம் பகுதிக்கு, தடம் எண்: '10ஏ' பேருந்து இயக்கப்படுகிறது.
நேற்று, அதிகாலை 4:30 மணியளவில், ஆலிக்குப்பத்திலிருந்து கிளம்பி மதுராந்தகம் செல்ல வேண்டும்.
காலையில் பேருந்தை, ஓட்டுனர் இயக்க முற்பட்ட போது, 'மக்கர்' செய்துள்ளது.
பின், மதுராந்தகம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பணியாளர்கள் சென்று பேருந்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த பேருந்து பயணியர் கூறியதாவது:
ஆலிக்குப்பத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் பேருந்தில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் மதுராந்தகம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆலிக்குப்பத்தில் இருந்து, நாள்தோறும் மதுராந்தகத்திற்கு மீன் எடுத்துச் சென்று, வியாபாரம் செய்யும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதிக்கு வரும் பேருந்து, அடிக்கடி பழுது ஏற்பட்டு நிற்கிறது.
இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
துறை சார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து, நல்ல முறையில் இயங்கும் பேருந்தை ஆலிக்குப்பம் பகுதிக்கு இயக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

