/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் - -உத்திரமேரூர் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் துவக்கம்

ADDED : ஆக 03, 2025 12:31 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் பணி துவங்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.
மதுராந்தகத்தில் இருந்து நெல்வாய் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையை அகலப்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரம் உள்ள நாவல், புங்கன் உள்ளிட்ட மரங்களை அப்புறப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
மதுராந்தகம் வனச்சரகர் விஜயகுமார், தலைமையில், சாலையில் இடையூறாக உள்ள மரங்கள் குறித்து, நேற்று முன்தினம் கணக்கெடுக்கப்பட்டது. நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் துவக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.