/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
/
மதுராந்தகம் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுராந்தகம் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுராந்தகம் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ADDED : நவ 22, 2025 01:42 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன், 48.
இவரது மனைவி கலா பெயரில், ஈசூரில் 15 சென்ட் இடம் உள்ளது. இதில், 3 சென்ட் இடத்தை தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய, மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
அப்போது, பத்திரப் பதிவு செய்ய, மதுராந்தகம் சார் - பதிவாளர் கார்த்திகேயன், 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதில், கடைசியாக 15,000 ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
லஞ்சம் தர விரும்பாத சிவராமன், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, சார் - பதிவாளர் கார்த்திகேயன் கூறிய தனியார் பத்திர எழுத்தர் சிவா என்பவரிடம், சிவராமன் 10,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
அங்கு மறைந்திருந்த, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர், தனியார் பத்திர எழுத்தர் சிவாவை, கையும் களவுமாக பிடித்தனர்.
பின், இதுகுறித்து, சார் - பதிவாளர் கார்த்திகேயனிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

