/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 22, 2025 01:42 AM

செங்கல்பட்டு: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ரெங்கா மருத்துவமனையில், இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் துவக்க விழா, மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பிச்சுமணி தலைமையில், நேற்று நடந்தது.
மருத்துவமனை நிர்வாகி அனுராதா பிச்சுமணி வரவேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை' குறித்து, 2023ம் ஆண்டு முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதை, 2028 வரை ஐந்தாண்டு திட்டமாக, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் மலர்விழி, மாவட்ட கல்வி அலுவலர் மஹாலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதார குழுக்கள் அமைத்து, ஆரோக்கிய செயல்பாடுகளை நிறைவு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது.
சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், இந்திய மருத்துவ சங்க நிர்வாகி டாக்டர் ஜெயகுமார், டாக்டர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இலவச மருத்துவ முகாம் இன்று துவங்கி, வரும் 23ம் தேதி வரை நடப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

