/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
/
மதுராந்தகத்தில் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
ADDED : நவ 09, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலராக ரம்யா, நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் தியாகராஜன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலராக ரம்யா பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆர்.டி.ஓ.,வுக்கு மதுராந்தகம் வட்டாட்சியர், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.