/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்குன்றத்திற்கு இடமாறுதல் பைக்கில் வந்த மதுரை வீரர் பலி
/
செங்குன்றத்திற்கு இடமாறுதல் பைக்கில் வந்த மதுரை வீரர் பலி
செங்குன்றத்திற்கு இடமாறுதல் பைக்கில் வந்த மதுரை வீரர் பலி
செங்குன்றத்திற்கு இடமாறுதல் பைக்கில் வந்த மதுரை வீரர் பலி
ADDED : ஜூலை 07, 2025 11:15 PM
செங்கல்பட்டு, சென்னை செங்குன்றம் நிலையத்தில் இடமாறுதல் கிடைத்ததை அடுத்து, பைக்கில் மதுரையில் இருந்த வந்த தீயணைப்பு வீரர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அடுத்த சத்ரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 38; தீயணைப்பு வீரர். இவர், அலங்காநல்லுாரில் பணிபுரிந்தார்.
இவருக்கு, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு, சமீபத்தில் பணி மாறுதல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை மதுரையில் இருந்து, தன் 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில், பிரபு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நேற்று இரவு, செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகே ஜி.எஸ்.டி., சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர தரைப்பாலத்தில் மோதியது.
இதில் பிரபு துாக்கி வீசப்பட்டபோது, ஹெல்மெட் கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.