/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு மகாலட்சுமி நகர்வாசிகள் குற்றச்சாட்டு
/
நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு மகாலட்சுமி நகர்வாசிகள் குற்றச்சாட்டு
நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு மகாலட்சுமி நகர்வாசிகள் குற்றச்சாட்டு
நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு மகாலட்சுமி நகர்வாசிகள் குற்றச்சாட்டு
ADDED : டிச 02, 2024 02:47 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம், மகாலட்சுமி நகர் பகுதியில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியது. மேலும், அருகில் உள்ள உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர், அமுதம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை, ராட்சத மோட்டார் வாயிலாக, மழைநீர் வடிகால்வாயில் வெளியேற்றினர்.
அப்போது, அங்கு வந்த நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் ராணி, பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகளை, குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பகுதிவாசிகள் முற்றுகையிட்டனர்.
குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மழைக்காலங்களிலும், இப்பகுதியில் மழைநீர் தேங்குகிறது. இப்பகுதியில் தரைதளத்தில் குடியிருப்போர், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையும், வீட்டிற்குள் மழை நீர் புகுவது வாடிக்கையாக உள்ளது.
இப்பகுதியை கலெக்டர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மழை காலங்களில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால், எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனர் கூறியதாவது:
மழைநீர் தேங்காதவாறு, வடிகால்வாய் அகலப்படுத்தி, சீராக செல்வதற்கு வரைபடம் மற்றும் செலவுத்தொகை உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளோம்.0
விரைவில் ஒப்புதல் பெற்று, பணிகள் நடைபெற உள்ளன. அதன்பின், மழைநீர் சீராக செல்வதற்கு வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, குடியிருப்புவாசிகள் மற்றும் நலச்சங்கத்தினர் கலைந்து சென்றனர்.