/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணமை, கடம்பாடி பால பணி போக்குவரத்திற்கு மாற்றுப்பாதை
/
மணமை, கடம்பாடி பால பணி போக்குவரத்திற்கு மாற்றுப்பாதை
மணமை, கடம்பாடி பால பணி போக்குவரத்திற்கு மாற்றுப்பாதை
மணமை, கடம்பாடி பால பணி போக்குவரத்திற்கு மாற்றுப்பாதை
ADDED : செப் 20, 2024 12:11 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை, நான்குவழியாக மேம்படுத்தும் பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இத்தடத்தில், பிற சாலைகள் குறுக்கிடும் இடங்களில், மேம்பாலம், பெட்டி பாலம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.
மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியில், கடம்பாடி - மணமை சாலை குறுக்கிடுகிறது. இப்பகுதியில் மேம்பாலம் கட்ட, விரிவாக்க பகுதியில் துாண்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய சாலையிலும், துாண்கள் கட்டப்படும். இதேபோன்று, கடம்பாடி விரிவாக்க பகுதியில், பெட்டி பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய சாலையிலும், பாலத்தை நீட்டித்து கட்ட வேண்டும்.
பழைய சாலையில் பாலம் கட்டுமான பணிகளை துவக்கவுள்ள நிலையில், வாகனங்கள் இடையூறின்றி செல்ல, இரண்டு இடங்களிலும், மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானப் பணிகளை துவக்கும்போது, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுமதிக்க உள்ளதாக, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.