/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை நகராட்சி கமிஷனர் ஒன்றரை மாதத்தில் மாற்றம்
/
மாமல்லை நகராட்சி கமிஷனர் ஒன்றரை மாதத்தில் மாற்றம்
ADDED : ஏப் 30, 2025 09:44 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் கமிஷனர் ஒன்றரை மாதத்தில் மாற்றப்பட்டு, புதிதாக பெண் கமிஷனர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி, தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதன் முதல் கமிஷனராக நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவிதாஸ்ரீ நியமிக்கப்பட்டார். இவர், மார்ச் 9ம் தேதி பொறுப்பேற்றார்.
இவர், நகராட்சி நிர்வாகத்தில் மேம்பாட்டு நடவடிக்கை, அரசியல் தலையீடுகளை தவிர்ப்பது உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில், கூடலுாருக்கே சுவிதாஸ்ரீ மாற்றப்பட்டுள்ளார்.
குன்றத்துார் நகராட்சி கமிஷனர் கவின்மொழி, மாமல்லபுரம் கமிஷனராக நியமிக்கப்பட்டு, கடந்த 28ம் தேதி பொறுப்பேற்று உள்ளார்.