/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பயணியர் பூங்கா ரூ.1.40 கோடியில் துவக்கம்
/
மாமல்லை பயணியர் பூங்கா ரூ.1.40 கோடியில் துவக்கம்
ADDED : நவ 28, 2024 02:35 AM
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகில், பேரூராட்சிக்கு சொந்தமாக, 4.5 ஏக்கர் பரப்பில் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் பொது திறவிட வளாகம் உள்ளது.
இங்குள்ள பழமையான கட்டடத்தை, பேரூராட்சி நிர்வாகம் தனியாரிடம் வாடகைக்கு அளித்துள்ளது. இவ்வளாகம், கடற்கரை கோவிலை ஒட்டியே உள்ள நிலையில், தொல்லியல் துறை தடை விதிகளின்படி, கட்டுமானம் மேற்கொள்ள இயலாது.
எனவே, பயணியர் பூங்கா அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. 2024 - 25 அம்ருத் திட்டத்தில், 1.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
மலர் செடிகளுடன் புல்வெளி பூங்கா, அமரும் இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், குடிநீர், கழிப்பறை, கிரில் கம்பி தடுப்பு ஆகியவற்றுடன், பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.