/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் - கிளாம்பாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
/
மாமல்லபுரம் - கிளாம்பாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
மாமல்லபுரம் - கிளாம்பாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
மாமல்லபுரம் - கிளாம்பாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2024 01:40 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இங்கு வசிப்போர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, கல்பாக்க பகுதியில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியினர் மற்றும் சுற்றுலா பயணியர் ஆகியோருக்கு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம், முக்கிய நிலையமாக உள்ளது.
மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிப்போர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியும்.
மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கத்தில் இருந்து, கிளாம்பாக்கம் நிலையத்திற்கு, நேரடியாக பேருந்து இல்லை. இதனால், பேருந்து மாறி மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாகவும், கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம், திருப்போரூர் வழியாகவும், கிளாம்பாக்கம் நிலையத்திற்கு பேருந்து இயக்க, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

