/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் - மதுராந்தகம் புது சாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 15 கிராமம் தேர்வு
/
மாமல்லபுரம் - மதுராந்தகம் புது சாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 15 கிராமம் தேர்வு
மாமல்லபுரம் - மதுராந்தகம் புது சாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 15 கிராமம் தேர்வு
மாமல்லபுரம் - மதுராந்தகம் புது சாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 15 கிராமம் தேர்வு
ADDED : நவ 25, 2025 03:23 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் - மதுராந்தகம் இடையே அமைக்கவுள்ள நான்குவழிப் பாதைக்காக, திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
சென்னைக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் இடையே, போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய, மேற்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களுடன் சென்னையை, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இணைக்கிறது.
இத்தடத்தை தினமும் இலகுரக, கனரக, சரக்கு வாகனங்கள் என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. சென்னையின் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் - செங்கல்பட்டு பகுதியில், சென்னை வரும் மற்றும் சென்னையிலிருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே நேரத்தில் அணிவகுக்கின்றன.
இதனால் தினமும் கடும் நெரிசல் ஏற்பட்டு, குறுகிய தொலைவை, சில மணி நேரம் ஊர்ந்து க டந்து செல்கின்றன. பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில், வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்குகிறது.
இச்சிக்கலை தவிர்த்து தீர்வு கருதி, சென்னையை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாகனங்கள், செங்கல்பட்டு - தாம்பரம் வழியாக செல்லாமல், மதுராந்தகத்திலிருந்து, மாமல்லபுரம் வழியாக செல்ல, புதிய நான்குவழிப் பாதை ஏற்படுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மாமல்லபுரம் - மதுராந்தகம் இடையே, 32 கி.மீ., சாலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள், 'கன்சல்டிங்' நிறுவனம் மூலமாக ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த புதிய தடம் வகுக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரத்திலிருந்து, திருக்கழுக்குன்றம் வழியாக, மதுராந்தகம் அடுத்த கக்கிலப்பேட்டை வரை, முன்பு ஒருவழிப் பாதையாக இருந்தது.
மாமல்லபுரத்திற்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், செங்கல்பட்டு வழியாக சுற்றிச் சென்றதால், சுற்றுலா போக்குவரத்து கருதி இந்த சாலையை மேம்படுத்துமாறு, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 2018ல், 10 மீ., அகல சாலை அமைக்கப்பட்டு, தற்போது வாகனங்கள் செல்கின்றன.
தற்போது, திருக்கழுக்குன்றம் நகர்ப்பகுதியில் சாலை குறுகியதாக உள்ளதால், வாகன நெரிசலில் போக்குவரத்து முடங்குகிறது. எனவே, திருக் கழுக்குன்றம் தாலுகாவில், இத்தடத்தை முற்றிலும் தவிர் த்து, வேறு தடமாக சாலை அமைக்க கருதி, 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கடம்பாடி பகுதியில் துவங்கி மேலகுப்பம், நல்லான்பிள்ளை பெற்றாள், நல்லுார் , பட்டிக்காடு, முள்ளிகொளத்துார், கருமாரப்பாக்கம், ஈச்சங்கரணை, அம்மணம்பாக்கம், குன்னவாக்கம், பெரும்பேடு, கிளாப்பாக்கம், பா ண்டூர், விளாகம், வல்லிபுரம் ஆகிய பகுதிகள் வழியே சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த் துறையினர் கூறியதாவது:
திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், இச்சாலைக்கு 15 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறு வனம் நிலம் கேட்டுள்ளது.
இந்த கிராம நில பதிவேடுகளை, நில எடுப்பு நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

