/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 7 சட்டசபை தொகுதியில் 1.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
/
செங்கையில் 7 சட்டசபை தொகுதியில் 1.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கையில் 7 சட்டசபை தொகுதியில் 1.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கையில் 7 சட்டசபை தொகுதியில் 1.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ADDED : நவ 25, 2025 03:24 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன .
இந்த தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்கள், இரட்டை வாக்குப்பதிவு, முகவரியில் இல்லாதவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை நீக்க வேண்டும் எ ன, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம், நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபை தொகுதி களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 4ம் தேதி துவங்கி டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச., 9ம் தேதி வெளியிடப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதி களில் உள்ள, 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கி வருகின்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அவரவர் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று, படிவங்களின் பிரதிகளை வழங்கினர்.
மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில், இறந்தவர்கள் 85,598, இரட்டை வாக்காளர்கள் 9,810, வசிப்பிடத்தில் இல்லாதவர்கள் 20,576 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 984 வாக்காளர்கள் இல்லை.
இதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்களின் பிரதிகள் வாங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப் பணி நிறைவு பெற்ற உடன், வாக்காளர்களில் நீக்கப்பட்டவர்கள் முழு விபரம் தெரியவரும் என, மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

