/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்விகள்
/
சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கேள்விகள்
ADDED : நவ 25, 2025 03:24 AM
சமூக ஆர்வலர்கள்
முன்வைக்கும் கேள்விகள்
சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் மேம்பாலம் கட்ட அனுமதி வாங்கியிருக்கும் ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில், எத்தனை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?
ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், இதற்கு முன் செய்துள்ள சமூக பணிகள் என்ன?
தி.நகரில் உள்ள ஆர்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் எந்த ஊழியர்களும் பணியாற்றாத நிலையில், அந்த நிறுவனத்திற்கு எப்படி சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது?
ஆள் நடமாட்டமே இல்லாத, மக்களுக்கு பயன்பாடில்லாத காட்டுப் பகுதியில், ஏரி மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து, 'சி.எஸ்.ஆர்.,' நிதியின் கீழ் மேம்பாலம் கட்டுவதால், பொது மக்களுக்கு என்ன பயன்?
ஊனமாஞ்சேரி ஊராட்சியில், மக்கள் பொழுது போக்க ஒரு பூங்கா கூட இல்லை. காட்டுப் பகுதியில் மக்களுக்கு பயன்பாடற்ற மேம்பாலம் கட்டுவதற்கு பதிலாக, சி.எஸ்.ஆர்., நிதியை பூங்காக்கள் கட்ட ஏன் பயன்படுத்தவில்லை?
இதுபோன்ற கேள்விகளை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

