/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறிய குடிநீர் தொட்டியை சீரமைப்பது எப்போது?
/
சிறிய குடிநீர் தொட்டியை சீரமைப்பது எப்போது?
ADDED : நவ 25, 2025 03:24 AM

ம துராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமனம் கிராமத்தில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் உடைந்துள்ளதால், மரக்குச்சியில் துணியைச் சுற்றி, குழாயில் இருந்து தண்ணீர் கசிவதை அடைத்து வைத்துள்ளனர்.
ஆனால், தொட்டியிலிருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
மேலும், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த குடிநீர் குழாயை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- பி.சுரேஷ், சாமந்திபுரம்.

