/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமண்டூர் பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
/
மாமண்டூர் பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
மாமண்டூர் பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
மாமண்டூர் பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
ADDED : அக் 19, 2024 01:29 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை ஓரம், மதுராந்தகம் மார்க்கத்தில், பாலாற்றங்கரை அருகே, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2018- - 19ல், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது, பயணியர் நிழற்குடையில் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து, துருப்பிடித்து உள்ளன. நிழற்குடையின் தரைப்பகுதி முழுதும் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பெயர்ந்து, உடைந்துள்ளன.
தரைப்பகுதிகள் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது.
எனவே, சேதமடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிதாக இருக்கைகள் அமைத்து தரவும், நிழற்குடையின் தரைப்பகுதியை சீரமைத்து தரவும் வேண்டும் என, அப்பகுதி பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.