/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் மாம்பாக்கம் கிராமத்தினர் அதிருப்தி
/
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் மாம்பாக்கம் கிராமத்தினர் அதிருப்தி
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் மாம்பாக்கம் கிராமத்தினர் அதிருப்தி
மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் மாம்பாக்கம் கிராமத்தினர் அதிருப்தி
ADDED : செப் 29, 2025 01:38 AM

திருப்போரூர்:மாம்பாக்கம் ஊராட்சியில் மின்மாற்றி பொருத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டம், மாம்பாக்கம் ஊராட்சி முதலாவது வார்டில், 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மாம்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்கு, மின் பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளிர்சாதன பெட்டி, மின் விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகி வருகின்றன.
இப்பகுதிக்கு தனி மின்மாற்றி பொருத்த வேண்டும் என, மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதுகுறித்து மக்கள் குறைதீர் கூட்டத்திலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும் மனு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மின்மாற்றி பொருத்துவதற்கு திட்டமிட்டு, அதற்காக அப்பகுதியில் கான்கிரீட் சுவர், கம்பம் பதித்து, அதில் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டன.
ஓராண்டு கடந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு முன் மின்கம்பி மட்டும் இணைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அதில் மின்மாற்றி மட்டும் பொருத்தப்படாமல் உள்ளது.
மின்மாற்றி பொருத்த மின்வாரியத்தினர் தாமதம் செய்து வருவதால், குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் மின் பற்றாக்குறை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாம்பாக்கம் மின்வாரியத்தினர் விரைந்து மின்மாற்றியை பொருத்தி, சீரான மின் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.