ADDED : அக் 24, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 30. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி, மதுபோதையில் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கத்தியால் தமிழ்ச்செல்வியின் தலை, முகம், கை, கால் போன்ற இடங்களில் வெட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, காயமடைந்த தமிழ்ச்செல்வியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சையில் உள்ளார்.
திருப்போரூர் போலீசார் நேற்று கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

