/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை
/
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை
ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 19 ஆண்டுகள் சிறை
ADDED : அக் 24, 2025 10:29 PM
செங்கல்பட்டு: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி, 2019ம் ஆண்டு, 26 வயது இளம்பெண் ஒருவர் மின்சார ரயிலில் பயணித்தார்.
அப்போது அந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம் ரயில்வே பணிமனைக்கு சென்றது.
இளம்பெண் சென்ற ரயில் பெட்டியில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், அப்பெண்ணை தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
மேலும் இளம்பெண்ணின் மொபைல் போன் மற்றும் கல்லுாரி சான்றிதழ்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்த புகாரின்படி, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, சம்பவத்தில் ஈடுபட்ட அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ராமு, 50, என்பவரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம், செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி அமர்வு முன் நடைபெற்றது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராமுவுக்கு 19 வருட கடுங்காவல் தண்டனையும், 5,500 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராமு போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

