/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
/
வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : பிப் 02, 2025 12:07 AM

சென்னை,வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 23. இவருக்கு, போலந்து நாட்டில் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில், கறி வெட்டும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாடி குப்பத்தைச் சேர்ந்த சாய்புதின், 51, என்பவர், 1.25 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
ஆனால், வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், சாய்புதின் இதேபோல் நுாற்றுக்கணக்கானோரிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மடிக்கணினி, ஐ - போன், போலியான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
போலியான நிறுவனங்கள் வாயிலாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என, சென்னை காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.