/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது
ADDED : நவ 11, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: கேளம்பாக்கம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஒருவர், கடந்த 6ம் தேதி பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஒருவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், கேளம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், திருப்போரூர் அடுத்த காயார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 43, என்பவர், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, ஜெயக்குமாரை நேற்று கைது செய்தனர்.

