/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது
/
கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது
ADDED : மார் 25, 2025 09:57 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பழத்தோட்டம் அருகில் சிறார் கூர்நோக்கு இல்லம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்,26, சுலைமான் உள்ளிட்ட ஐந்து பேர் தங்கி, கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் தங்கியிருந்த அறைக்கு, கையில் இரும்பு கம்பியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தோரை மிரட்டி, அவர்களிடமிருந்து நான்கு மொபைல்போன்களை பறித்துச் சென்றார்.
இது குறித்து விஜய் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்,40, என்பவரை கைது செய்து, இரண்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.