/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு மருத்துவமனையில் செம்பு பைப் திருடியவர் கைது
/
அரசு மருத்துவமனையில் செம்பு பைப் திருடியவர் கைது
ADDED : ஜூன் 06, 2025 09:41 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தில், 'ஏசி'யில் பொருத்தப்பட்டு இருந்த செம்பு குழாய்களை, நேற்று காலை மர்ம நபர் ஒருவர் கழற்றிக் கொண்டு தப்பிக்க முயன்றார்.
அங்கிருந்தோர் அவரை மடிக்கிப் பிடித்து, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட நபர், செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்த முரளி,40, என்பதும், செம்பு குழாய்களை தொடர்ந்து திருடி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.