/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நங்கநல்லுாரில் நகை பறித்தவர் கைது
/
போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நங்கநல்லுாரில் நகை பறித்தவர் கைது
போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நங்கநல்லுாரில் நகை பறித்தவர் கைது
போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் நங்கநல்லுாரில் நகை பறித்தவர் கைது
ADDED : மார் 22, 2025 11:27 PM
நங்கநல்லுார்,
நங்கநல்லுார், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி, 42. இவர், சில நாட்களுக்கு முன், வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த ஒரு நபர், தன்னை போலீஸ் என கூறினார்.
திரிபுரசுந்தரியிடம் வாகனங்களுக்கான ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கேட்டுள்ளார்.
அதற்கு அவர், அருகில் உள்ள கடைக்கு செல்வதால், அவற்றை கொண்டு வரவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் அணிந்திருந்த ஒரு சவரன் நகையை பெற்றுக் கொண்டு, ஆவணங்களை காட்டி விட்டு வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளார்.
அதை உண்மை என நம்பிய திரிபுரசுந்தரி, வீட்டிற்கு சென்று ஆவணங்களுடன் திரும்பியபோது, அந்த நபர் மாயமாகியிருந்தார்.
இது குறித்த புகாரின்படி, பழந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.
இதில், போலீசாக நடித்து, திரிபுரசுந்தரியிடம் நகை பறித்தது, பழைய குற்றவாளியான நுங்கம்பாக்கம், தேவநாயகன் தெருவை சேர்ந்த கனகராஜ், 48, என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், நகை பறித்தது உறுதியானது.
மேலும், அவர் மீது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.