/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மது பதுக்கி விற்ற நபர் கோவிந்தாபுரத்தில் கைது
/
மது பதுக்கி விற்ற நபர் கோவிந்தாபுரத்தில் கைது
ADDED : நவ 10, 2024 07:34 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில், தினமும் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக, பொது மக்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வீடியோ, சமுக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், அங்கு கள்ளத்தனமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியை சேர்ந்த முருகன், 28, என்பவரை கைது செய்தனர்.
பின், அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், முருகனை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.