/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நுதனமாக ரூ.3 லட்சம் திருடியவர் சிக்கினார்
/
நுதனமாக ரூ.3 லட்சம் திருடியவர் சிக்கினார்
ADDED : டிச 21, 2024 10:22 PM
செங்கல்பட்டு:சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், தி.நகரில் பழைய தங்க நகைகள் வாங்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 19ம் தேதி, செங்கல்பட்டில் இருந்து பேசுவதாக அப்துல் ரகுமான், சஹாரூதீன்,41, என்பவர்கள், மொபைல்போனில் இவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
தங்களுக்கு சொந்தமான 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, செங்கல்பட்டு ஐ.ஓ.பி., வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும், அதை மீட்டு, சரவணனின் நிறுவனத்தில் அடகு வைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சரவணன், கடந்த 19ம் தேதி, தன் நிறுவனத்தில் பணிபுரியும் விஜய்,26, என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து, செங்கல்பட்டு ஐ.ஓ.பி., வங்கிக்கு அனுப்பியுள்ளார்.
அங்கு காத்திருந்த அப்துல் ரகுமான், சஹாரூதீன் இருவரும், 3 லட்சம் ரூபாயை வாங்கி, வங்கியில் செந்தில்வேலன் என்பவரின் கணக்கில் செலுத்தி உள்ளனர்.
மீதி பணத்துடன் அப்துல் ரகுமான், எச்சில் துப்ப செல்வது போல் வெளியே சென்று ஸ்கூட்டரில் தப்பினார்.
சஹாரூதீன் தப்ப முயன்ற போது, பொது மக்களின் உதவியுடன் விஜய் அவரை பிடித்து, செங்கல்பட்டு நகர போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், செந்தில்வேலன் கணக்கில் செலுத்திய 2 லட்சம் ரூபாயை, திரும்ப எடுத்தது தெரிந்தது. சஹாரூதீனை கைது செய்த போலீசார், தப்பிச்சென்ற ரகுமானை தேடி வருகின்றனர்.