/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி
ADDED : ஆக 01, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:ஜக்கம்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராவத்தநல்லுார் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன், 54, என்பதும், தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
நேற்று காலை 11:00 மணிக்கு சொந்த ஊருக்கு வைகை விரைவு ரயிலில் சென்ற போது, திண்டிவனம் அடுத்த ஜக்கம்பேட்டை பகுதியில், தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.