/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலிவந்தபட்டு சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
/
கலிவந்தபட்டு சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
கலிவந்தபட்டு சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
கலிவந்தபட்டு சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு
ADDED : நவ 14, 2025 10:23 PM
மறைமலை நகர்: கலிவந்தபட்டு -- கூடலுார் சாலையில், ஜல்லி கற்களால் தடுமாறி பைக்கிலிருந்து விழுந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைமலை நகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 35; அதே பகுதியில் வாத்து வியாபாரம் செய்து வந்தார்.
இவர், கடந்த 2ம் தேதி இரவு, 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில், மறைமலை நகரில் இருந்து கலிவந்தபட்டு நோக்கிச் சென்றார். கலிவந்தபட்டு -- கூடலுார் சாலையில் சென்ற போது, சாலையில் கொட்டப்பட்டு இருந்த ஜல்லிகளால் தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார்.
அங்கிருந்தோர் பிரபுவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு உயிரிழந்தார்.
இதுகுறித்து, பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.