/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
/
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
ADDED : ஜன 04, 2025 12:44 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 44. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்போருக்கும், எட்டு ஆண்டுகளாக அடிக்கடிசண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த நவ., 30ல் ஏற்பட்ட சண்டையில், பாபு மற்றும் அவரது குடும்பத்தினரை, எதிர்தரப்பு தாக்கியதாக கூறப்படுகிறது. பல்லாவரம் போலீசில் பாபு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
விரக்தியடைந்த பாபு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு நேற்று காலை வந்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த கலெக்டர் அருண்ராஜ், பாபுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

