/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானாமதி சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி
/
மானாமதி சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி
மானாமதி சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி
மானாமதி சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி
ADDED : மார் 18, 2025 12:25 AM
திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியம், மானாமதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இ.சி.ஜி., ஆம்புலன்ஸ் போன்ற, போதிய மருத்துவ வசதிகள் இல்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மானாமதியில், 2013ம் ஆண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதில், துணை சுகாதார மையம் செயல்படும் ஊராட்சிகளான காரணை, ஒரகடம், அருங்குன்றம், திருநிலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இதில், காலை மட்டுமே மருத்துவர்கள் வருகின்றனர். இரவில் மருத்துவர் இருப்பதில்லை. சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளன.
ஆனால், மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு, இ.சி.ஜி., எடுப்பதற்கான கருவி இல்லை. ஒருவர் விபத்தில் மரணம் அல்லது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என, பரிசோதனை செய்வதற்கு கூட, இங்கு இ.சி.ஜி., வசதி இல்லை.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கி, 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல முறை கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சர், கலெக்டர் ஆகியோர், மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
இங்கு, மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்களை நிரப்பி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
இல்லையென்றால், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.