/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை மாத்திரை பதுக்கிய மணிப்பூர் பெண் கைது
/
போதை மாத்திரை பதுக்கிய மணிப்பூர் பெண் கைது
ADDED : ஜூலை 28, 2025 11:47 PM
சென்னை, மடிப்பாக்கத்தில், 4,800 வலி நிவாரண மாத்திரைகளை, சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மணிப்பூர் மாநில பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மடிப்பாக்கம், கலைவானர் தெருவில், மடிப்பாக்கம் போலீசார், கடந்த 27ம் தேதி மதியம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பார்சல் பெட்டியுடன் நின்றிருந்த பெண்ணை விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்தனர். அதில், போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.
பின், அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் மணிப்பூரை சேர்ந்த வுங்க்லியான்சிங், 39, என்பதும், சண்டிகரில் இருந்து கூரியர் மூலம் மாத்திரைகளை வாங்கி, சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததும், அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
அவரிடமிருந்த 4,800 வலி நிவாரண மாத்திரைகள், ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.